உவமை
நிலவினோடு என்னை உவமை கூறும் பெண்ணே இனியும் அப்படி கூறாதே
காம நிலவு அது இரவில் மட்டும் வரும் பகலில் உன்னை வந்து சேராதே
பகலில் உன்னை தாங்கிடும்
இரவில் நீ தூங்கிடும்
நிலமென என்னை உவமை சொல்லடி
உயிரோடு உடலும் சுமப்பேன்
உடலோடு நிழலும் சுமப்பேன்
முப்பொழுதும் உன்னை சுமக்கும் தாய் நானடி!