நாத்திகன் சிறந்தவனே
கடவுள் இல்லை கடவுள் இல்லை - என்று
ஆத்திகனை விட கடவுளை பற்றி
அதிகமாய் பேசுபவனும் நினைப்பவனும் நாத்திகனே
கடவுளின் மேல் பழி போட்டு
காலத்தை கடக்கும் ஆத்திகனை விட
தன்னை நம்பி காலம் கழிக்கும் நாத்திகன் சிறந்தவனே
நாமமும் பட்டையும் சக்களத்தி சண்டை
இடுகின்ற வேளையில் நாத்திகன் சிறந்தவனே
மத கலவரத்தில் மானுடம் அழிகையில்
நாத்திகன் சிறந்தவனே
காவி வேட்டிகள் கற்பழிப்பு வழக்கில்
கைது ஆகும் வேளையில்
ஆத்திகனை விட நாத்திகன் சிறந்தவனே
கோவில் வாசலிலே பிச்சை எடுக்கும் கூட்டத்திற்கே கருணை காட்டாத
கடவுள்கள் வாழும் உலகில்
நாத்திகன் சிறந்தவனே
கடவுளை தேடி காசிக்கும் ரமேஸ்வரதிர்க்கும்
படையெடுக்கும் கூடத்திற்கு மத்தியில்
தனக்குள் கடவுளை காணும் நாத்திகன்
சிறந்தவனே
நான் ஆத்திகன் என்பதை விட நாத்திகனின் தோழன் என்பதிலேயே பெருமையை அடைகிறேன்
காரணம் நாத்திகனுக்கு மட்டுமே
கடவுள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு
வரத்தை தந்தவன் என் கடவுள்
என்ற நம்பிக்கைள் மீண்டும் ஒருமுறை
சொல்கிறேன்
நாத்திகன் சிறந்தவனே
நாத்திகன் சிறந்தவனே
பக்தியுடன்
சத்யா