எனக்குள் ஒருத்”தீ”
அலுவலகம் முடிந்து
வீடு திரும்புகிறேன்...
பக்கத்துவீட்டில்
கட்டிட வேலைகள்
நிகழ்ந்துகொண்டிருக்கின்றன...
ஆளுயரத்திற்கு மேல்
ஆற்றுமணல்
குவிக்கப்பட்டிருக்கின்றது...
என் மனதிற்குள்
ஒரு சிறுமி வெளிப்பட்டாள்...
அவள் என்னை
ஓடிப்போ,
மேல் நோக்கி
குதி என்று கட்டளையிட்டாள்...
ஏனோ உடல் உந்தித்தள்ள
விரைந்து நடந்தேன்...
ஆனாலும்
என்னால்
அருகில் சென்று
ஒரு கை ஈர மணலை
அள்ளத்தான் முடிந்தது...