அழகான நாட்கள்,,,1

அழகான நாட்கள்,,,

யாரும் பார்த்திராத நேரத்திலே
ரோட்டோர தள்ளுவண்டியில்
இரவு சிற்றுண்டியை
வறுமையிலும் பகிர்ந்த நாட்கள்

இராட்சத விளக்கொளியின் நிசியிலே
எச்சிலிரவின் பிச்சைக்காரகள்
தாளத்திற்கு தனைமறந்து
தள்ளாட்டம் ஆடிய நாட்கள்

காதலர் பூங்காவின்
பாதசாரிகளின் நடைப்பாதையிலே
புதைக்கப்பட்ட பெஞ்சிலே அமர்ந்து
ஆழ்ந்த கண்விழிக் கனவுகளில் லயித்தநாட்கள்

ஒட்டப்பந்தயத்தினூடே
தோற்று போய்விடாமலிருக்க
வாத்தியார் வீட்டுப் பெண்ணினை
கரம்காட்டி கலாட்டா செய்து
கால்தெறிக்க ஓடிய நாட்கள்

பக்கத்து வீட்டு
பலகார வாசங்களோடு
சண்டைப்பிடித்தும்
கிடைக்காமல்
பசியோடு பாய்விரித்து
பாதிவயிற்றிலே
படுத்துறங்கிய அந்தநாட்கள்

வாசல்வரை தேடிவந்த வெற்றிகள் ,,
வாசலோடு சென்றுவிடக் கண்டு
உணர்வுகள் கொன்றுவிட வருந்தியநாட்கள்

கல்லூரி நெடுமரங்களினூடே
மனதில் நின்றுவிட்ட பெயர்களை
தன்னந்தனியே பிதற்றிக்கொண்டு
சித்திரமாக செதுக்கியநாட்கள்

விடிய விடிய கதை பேசி
வீதிவழி கவிதை சொல்லி
முகவரிகள் மறந்துவிட்டு
விடியலை நடந்தெட்டிய
கவிதை நண்பனின் அறிமுக நாட்கள்,,,,

அழகான நாட்கள் தான்,,,

அனுசரன்,,,,

எழுதியவர் : அனுசரன் (28-Feb-13, 10:17 am)
பார்வை : 395

மேலே