[419] வாழ்வு சுகப்படும்...
சுவைபடச்
சொல்ல
வேண்டின்,
சொல்வளம்
பெருக்க
வேண்டும்;
கவைபடல்
விரிவைக்
காட்டும் !
கருத்தினில்
பயனைக்
கூட்டும்!
கவைபடப்
பிரிந்து
வாழ்ந்தும்
கருத்தினில்
மாறு
பட்டும்
சுவைபடச்
சொல்ல
வாரீர்!
சுகப்படும்
வாழ்வு
காணீர்!
+++
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ?
வன்சொல் வழங்கு வது!----(குறள்)