கடைசியாகப் படித்த காதல்கவிதை?

நம்மால் காதலிக்கப்படுபவர்கள்
மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்
அறிந்திடலும் புரிந்திடலும்
அதுவே பரஸ்பர காதல் இயல்பு

அகராதியில் காதலின் முகம்
அளப்பறியா அதீத பாச உணர்வு
அதன் இன்னொரு முகமூடி
அதீத பாலியல் உணர்வு

கற்பனைக் காதல்-
அரைவேக்காடு ஓவியர்களின்
தெளிவற்ற கற்பனை ஓவியம்

தேவதாஸ் காதல்-
பாலியல் உணர்வுகளால்
அரிப்புத் தேய்மான அழிவு .
கதைகளைப் போன்று...
அரவணைப்பும் தோழமை உணர்வும்
அங்கே அரிதிலும் அரிது

நிபந்தனையற்ற காதல்-
எதையும் பொருட்படுத்தாமல்
எடுத்தெறிந்து வாழும்
ஏளனத்துக்குள் வாழும்
ஏமாற்றம் எள்ளி நகைக்கும்

பகட்டு(Puppy) காதல்-
அறிவற்றதன்மையும்
தற்பெருமையும் நிறைந்த
சொகுசு உணர்வு
ஜொலிக்கும் கண்ணாடி கல்
ஒரு வித போதைக் கள்

பொருளியல் காதல்-
தாய் காட்டும் அன்பு
தந்தை காட்டும் பரிவு
அன்பின் அரவணைப்பின்றி
பொருளாதாரத்தில் புதைவது.

பெற்றோர் வழிகாட்டுதலில்
வளரும் காதல்...
தத்தளிக்கும் போது
துடுப்புகள் கிடைக்கும்
உண்மையில் இந்தக் காதல்
உண்மைக்காதல்

நட்புக் காதல்-
நல்ல காதலா? கள்ளக் காதலா?
விவாதிக்கப்படும் காதல்
விவேகமில்லாதது.
நடைமுறையில்
வெளியுலகுக்கு விரசமாக...

தெய்வீக காதல்-
காதலிப்பது கடவுள் செயல்...
சாதி மதம் சாக்கடையாக
கலப்படமாக...
கழிசடையாக...
பகுத்தறிவு அற்ற காதல்
பண்பாடு மீறிய காதல்

சுயநலக்காதல்-
இவர் காதலிப்பது
இரண்டாம் பட்சம்
இவர் காதலிக்கப்படுவது
முதல் பட்சம்.....?

சாத்வீக காதல்-
சத்தியமாய்
இதுதான் காதல்
அடுத்தவர் நலம்பேனும்
நல்லதோர் காதல்

ஆசிட் காதல்-
புதிதாக முளைத்த
அழிக்கும் அமிலக்காதல்
உச்சகட்ட வேதனைக் காதல்
இஃது எந்த வகைக் காதல்
எதுவும் புரியவில்லை...?

(யோவ்--பரிதி! நீ எங்கே இருக்கிறாய்?
காணாமல் போனாளே என் காதலி
கடைசியாகப் அவள் படித்தது
உன் காதல் தத்துவங்களைத்தான்..
கல் எடுத்துக்கொண்டு வருகிறேன்
நீயும் காணாமல் போய்விடாதே)


................................பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (28-Feb-13, 2:38 pm)
பார்வை : 230

மேலே