பேராசைக்காரன் ...?

தினமும் உன்னை வழிபடுகிறேன் ...!
ஒரு வேலை கல்லாகவோ சிலையாகவோ இருக்கலாம்
எனது தொடர்ச்சியான வழிபாட்டால் ..
நீ கடவுளாகவும் மாறக்கூடும் .....?
எனக்கு வரம் தருவதற்காக
நீ அருள் தரவேண்டாம்
நீ கடவுள்அருள் தருவாய் என்று
நம்பிக்கையில் பலர் ....
உறுதியாக இருப்பதால் ...!
அவர்களை திருப்திப்படுத்துவதற்காக
என்றாலும் அருள் தா ...?
ஒருவேளை நீ திடீர் என காட்சிதந்து
மகனே ..! உனக்கு என்ன வரம் வேண்டும்..?
என மட்டும் கேட்டிடாதே ..நான் கொஞ்சம்
பேராசைக்காரன் ...?
உன் தொழிலையே கேட்டிடுவேன் ....?