பிஞ்சுக்கவிஞர்கள் நாங்கள்...!

மரபுக்கவிதைகளை மனதாரக் காதலிக்கும்...
தமிழிலக்கணம் மெத்தப்படித்த மரபுக்கவிஞர்களே...!
புதுக்கவிதைகள் படைத்து புதுத்தமிழிலக்கணம் படைத்திட்ட புதுக்கவிஞர்களே...!
தாய்மொழியின் ஆர்வத்தால்-எங்கள்
படைப்புகள் சமர்ப்பிக்க வந்த...
பிஞ்சுக்கவிஞர்கள் நாங்கள்-இங்கே
இலக்கணப் பிழையென்றும்....
இலக்கணமே இதிலில்லையென்றும்...
கருத்துக்கள் வரும்போது...
மனம் வலிக்கத்தான் செய்கிறது...!
அயினும்...
மோதிரக்கையால் குட்டுப்படுவது மேல்நிலையடையத்தான் என்றே...
மனம் தேற்றிக் கொள்கிறோம்...!
இங்கு வந்த பின்பே
இலக்கணம் இன்னும் ஆழமாய்...
படிக்கத் தோன்றியது...!
தவறுகள் சுட்டிக்காட்டுங்கள் தளர்ந்திட மாட்டோம்...!
பிழைகளைத் திருத்திட வழிநடத்துங்கள் வளர்ந்திடுவோம்...!
உங்களைப் போன்று...
தமிழ்மொழிப் பெட்டகத்தைக்...
காலக்கடல் கடந்து கொண்டு செல்லும்...
கப்பல்களாய் இல்லாவிட்டாலும்...
எதிர்காலத்திற்காய் தன்வலையில் சிறுதானியங்கள் சேகரிக்கும்...
சிற்றெறும்புகளாய்..
நாங்களும்....
ஓர் ஓரத்தில் இருந்துவிட்டு போகிறோமே...!

எழுதியவர் : ராஜதுரை மணிமேகலை (28-Feb-13, 4:58 pm)
பார்வை : 195

மேலே