அவ்வளவுதான்!"
சாமி ஒரு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
திடீரென விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக அறிவிப்பு வந்தது. எல்லா பயணிகளும் பயத்தோடு கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
சாமி மட்டும் எந்த டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக "15 நாட்களில் இந்தி கற்றுக்கொள்வது எப்படி"ங்கிற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்.
பக்கத்தில் இருந்த பயணி சாமியைப் பார்த்து,
"ஏங்க... நாம எல்லோரும் சாகப் போகிறோமே...இங்கே எல்லோரும் உயிர் பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கும் போது... நீங்களோ புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்... உங்களுக்கு உயிர் மேல பயமே இல்லையா?"
"நான் சாகப் போறதில்லேயே... மண்ணுசாமி தான் சாகப்போகிறார்..."
பக்கத்து இருக்கைக்காரருக்குப் புரியவில்லை.
"எப்படி?" என்றார்.
"உண்மையில் இது மண்ணுச்சாமியோட டிக்கெட்... அதில் நான் பயணம் செய்கிறேன்... அவ்வளவுதான்!"