இப்படிச் சொல்லிதான் எங்களை ஏமாத்திட்டுப் போனாரு !?
நாராயணசாமி ஒரு ஆலயத்தில் மத போதகர்.
ஒரு நாள் அன்றைய உரையை முடித்துவிட்டு ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தியை கூட்டத்தினருக்கு அறிவித்தார் நாராயணசாமி.
"அன்புக் குழந்தைகளே.. இதுதான் நான் உங்களுக்குத் தரும் இறுதிச் செய்தி. நாளை நான் பாண்டிச்சேரிக்கு மாறுதலாகிச் செல்கிறேன்..!"
கூட்டத்தில் பரபரப்பு.. ஒரு மூதாட்டி வந்து நாராயணசாமியை கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள்..
அவளை நாராயணசாமி ஆறுதல் படுத்தினார்..
"கவலைப்படாதீர்கள் அம்மா.. நாளை வரும் போதகர் சிறந்த அறிவாளராகவும், மிகத் தெளிவான உரை அளிப்பவராகவும் இருக்கக் கூடும்..!"
மூதாட்டி சற்று நிதானமாக நாராயணசாமியைப் பார்த்துச் சொன்னாள்,
"போன தடவை மாறுதல் ஆகிப் போனவரும் இப்படிச் சொல்லிதான் எங்களை ஏமாத்திட்டுப் போனாரு..!