தேடிக்கொண்டிருக்கிறேன்

தேடிக்கொண்டிருக்கிறேன் - ஆம்
என்னையே
உன்னை காணும் முன் இருந்த
என்னையே!

தனிமையில் நான்
சிரித்தது போதும்!
வெட்கத்தில் முகம்
சிவந்தது போதும்!

உலகமே என்னை பார்பதாய்
என நினைத்து
வியந்தது போதும்!
உன்னில் என்னை கண்டு
மகிழ்ந்தது போதும்!

பெற்றோரிடம் பொய் சொல்லி
மனம் பதைத்தது போதும்!
உன்னை காணமல் நெஞ்சம்
நொறுங்கியது போதும்!

போதும் போதும் - நீ
என்னை தங்கை
என நினைத்ததாக
கூறியது போதும்

தேடிக்கொண்டிருக்கிறேன் - ஆம்
என்னையே
உன்னை காணும் முன் இருந்த
என்னையே!

எழுதியவர் : கதிஜா (1-Mar-13, 10:06 pm)
பார்வை : 296

மேலே