பட்ட மரத்துப் பசுங்கிளி

அதோ அந்த பட்டமரத்தில்
ஒரு கிளி
அது ஏன் அந்த மரத்தில்
இன்னும்...

இலைகள் இல்லை...
அந்த கிளிக்கு வசதியான
கனிகளும் இல்லை...
வாழிடத்துக்கான வழியுமில்லை..
இருந்தாலும்....
அந்த மரத்தை விட்டு
கிளி
அந்தப் பசுங்கிளி
இன்னும் பறக்கவில்லை

அந்த மரம் நன்றாக இருக்கும் போதே
அதை நம்பி
வந்து விட்டது அந்த கிளி
அதுதான்
பட்டாலும் செத்தாலும்
அதிலேயே இருக்கிறது

நன்றாயிருந்த மரம்
தானாகவே மேலொட்டியை
வளரவிட்டது
பட்டு நிற்கிறது
தன்னை நம்பி வந்த
கிளி பற்றி கவலை இல்லை
அது சரி....
தன்னைப் பற்றியே
கவலையில்லை
பிறகெப்படி
தன்னை நம்பி
வந்த கிளியைப்
பற்றி கவலைப்படும்

கிளிக்கும் தெரியும்
இனி பசுமை வராதென்பது
இருந்தாலும் வாழ்கிறது
நம்பி வந்த பாவத்திற்காக

இந்த கிளியைப் போலத்தான்
இந்த மரத்தைப் போலத்தான்

நம் வாழ்க்கையிலும்
எத்தனை பட்ட மரங்கள்
அதை நம்பித்தான்
எத்தனை கிளிகள்

எழுதியவர் : கலைப்பிரியன் (அனுஜன்) (1-Mar-13, 10:50 pm)
பார்வை : 85

மேலே