உழவன்

உழுபவர்கள் நாங்கள்தான்
ஆனால்....
நிலம் எங்களுடையதல்ல

குத்தகைக்கு நிலம்
கடனுக்கு விதை நெல்
தினம் தினம் வெயிலில்

இத்தனைக்கும் பலன்....

அறுப்புக்குப் பின்....

எங்கள் உற்பத்திக்கு
விலை மட்டும்
வேறு எவனோ
தீர்மானிக்கிறான்

உழுபவனுக்கு நிலமும் சொந்தமில்லை
விலை நிர்ணயமும்
எமக்கில்லை
தன்னுடைய உற்பத்திக்கு
தானே விலையை
தீர்மானிக்க முடியாதவர்கள்
நாங்கள்தான்...

கடைசியில்
எம் கைக்கு
கிடைக்கின்ற காசு
என்னத்துக்கு காணும்
இப்படித்தான் ஓடுகிறது
வாழ்க்கை

ஆனால்....

என்றாவது ஒருநாள்

உழுபவனுக்கு நிலம் சொந்தமாகும்
விலையும் எங்களுடையதாகும்

எழுதியவர் : கலைப்பிரியன் (அனுஜன் ) (1-Mar-13, 10:51 pm)
Tanglish : uzhavan
பார்வை : 78

மேலே