என்னவளே அடி என்னவளே

அடித்து துரத்தினேன்
போகவில்லை

மிரட்டியும் பார்த்தேன்
கேட்கவில்லை

காலில் விழுந்தேன்
பணியவில்லை

கதறிப்பார்த்தேன்
பதறவில்லை

முடிவில்
ஏற்றுக்கொண்டேன்
என்ன அது?

நொடிக்கொருமுறை
எனைத்துரத்தும்
உன் ஞாபகமே!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (3-Mar-13, 5:41 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 173

மேலே