தமிழ் நாடு பெயர் மாற்றம் வருமோ (உச்சத்தின் உச்சமாக) :-

தமிழ் நாடு பெயர் மாற்றம் வருமோ (உச்சத்தின் உச்சமாக) :-
உட லாசைதாகம் அலையலையாக முந்தி தள்ள
உலகில் பிறக்குயி ரனைத்தும் உந்தி எழ
நீந்துவதும், நகர்வதும், பறப்பதெல்லாம் வாழதுடிக்க
ஆசையுரசும் ஓசையில் நீந்தி விளைவது சுகம்.

பல மொழி இவ்வுலகில் பிறக்கு முன்பே
இலக்கியமும் உழவும் உருள உருதுணையான
செம்பு, பொன்னி, வைகை,பொருணை, பெண்ணைனதியோடி செழித்த
முத்தமிழ் மாநிலத்தில் இன்று சாராய நதி?.

சுகத்தை அச்சாக்கி ஆறறிவுயிரும் அதனிற்சுழல
புலன்கள் உடலின் இயக்கத்தை கூட்டிக்குறைத்து இதமாக்க
எல்லா வுயிர்களுக்கும் அதனதன் புலன்கள் கருவியாக
ஆறறிவுயிர் அதற்க்கும் உச்சியேறி போதையாக்கியதே..
.
சோம, சூர பாணம் ஆதியுட னழிந்து போக
தெண்ணை, பனைநீர் புதிதாக பிறந்துவர
கரும்பு சாற்றுடன் சாராயமும் உதித்து வர
மூளைக்கு போதை யேற்றி அழிந்தவர் பலரே...

வாழையிலை விரித்து விருந்தினரை வரவேற்று
அறம் பொருள் இன்பம்,வீடு வழிந்தோடியது அன்று
அரசு விரித்த தெருக்களின் கடைகளில்
பொரு ளின்பத்துடன் சாராயம் சதிராடுகிறது இன்று…

ஐ புலனடங்கிய ஐம்பது கூட
ஐம்பதுபணத்தில் பெதும்பையை கசக்கியெறிவதேன்?
இயற்க்கை மழை பொய்க்க, ஆறு, குளம் வற்ற
செயற்க்கை சாராயம் வீதியெங்கும் வழிந்தோடுகிறதே...

மரியாதைக்கு பயந்து குடித்தகாலம் மலையேற
வீட்டின் காலடியில் விளக்கு வெளிச்சத்தில்
இரைப்பையில் விழும் எத்தனால் நெடி
உடலை இயக்கும் மூளை கட்டுப்பாட்டையிழப்பது நாகரிகமோ..

வடவேங்கடம் தென்குமரி எல்லையாக சுருங்க
சேர, சோழ, பாண்டிய,பல்லவ பெயர் மறைந்து போக
சென்னை பட்டினமும், மதராஸும்மாறி போக
வீதிகளில் ஓடும் சாராயநதியால் நாட்டின் பெயர் மாறுமோ…

நன்றி
வாழ்க வளமுடன்
ரா.சிவகுமார்.

எழுதியவர் : (3-Mar-13, 7:30 pm)
பார்வை : 95

மேலே