நேசிக்கவில்லை!
நாளை
உன்னை மறந்து
விடுவதாய்
நான் சொல்வது
உண்மைதான் .
எல்லா நாளைகளுக்கும்
இன்னொரு
நாளை இல்லாமலா!
எப்போதும் போல இப்போதும்
தோற்கிறேன்
என் காதலுக்காக,
நீ!
நான்,
நம் காதல்
எப்போதுமே வெறுமை
எனக்கு மட்டும்.
படபடக்கும் நெஞ்சு
ஆற்றங்கரைப் பூங்காத்
தென்றலாய்
எனக்கே எனக்கென
நீ! தந்த
நேசம் இன்று...
கணக்கும் இதயத்துடன்
எனை
காக்க வைத்து
கழுத்தறுக்கிறாய்,
நான்
ஒன்றுமே
செய்யவில்லை என்றே.
உன்
வாழ்வில்
நகக்கனுவளவு
துன்பம் நினைத்தேனா
நீ!
துரோகமிழைக்க.
காதல் அளித்து
எனை
கைவிட்டதை விட
நேசிக்கவில்லை என்றே
நீ
சொல்லி இருக்கலாம்.
அர்த்தமில்லா சொற்களை
சுமக்கும் உன்
பழைய மடலொன்று
எனைச் செல்லரிக்கிறது
இப்போ.
கிழித்தெறிய மனசின்றி
நான்
பத்திரமாக்கிய
உன் வரிகளாலான
காகிதம் கத்தியாய்
இன்றும்
வாசிக்க வாசிக்க
என் இதயம்
கிழிக்கிறது.
எதை எறியச்
சொல்கிறாய் உன்
கடிதங்களையா?
இல்லை அவை
கிழிக்கும் உனைச் சுமக்கும்
என் இதயத்தையா?
இரண்டும் முடியாமல்
தானடி
நான் மருத்துவம்
நாடுகிறேன்.
இருந்தும் நீ!
எனைக் கொல்கிறாய்.
என்
காதல்!
புனிதம் என்றால்
தேவதை நீ தானே!
எனை மட்டும்
ஏன்?
நாத்திகனாக்கினாய்.