சமய நதிகளின் சங்கமம் இறைவன்

இந்து மதம் நானும் நதிதான் இனிதாய்ப் பாய்ந்து
இறைவன் எனும் பெருங்கடலில் புகுந்து தங்கும்;
அந்தமிலாப் பேரன்பில் மையங் கொண்டு
அருள் காட்டிப் பாலித்த அய்யன் ஏசு;


தந்த கிறுத்தவ மதமாம் தனிப் பேராறும்
தடம் கொண்டு இறைவனெனும் கடலில் சேரும் ;
வந்த பெருஞ் செல்வமெலாம் வறியார்க் கீந்து
வாழ்ந்திடுதலே நலம் என்று நபிகள் சொன்னார் ;

முந்துபுகழ் இசுலாமாய் முளைத்த ஆறும்
முடிபாக இறைவன் எனும் கடலைச் சேரும் .
இந்தவகை நோக்கிடிலோ பௌத்தம் என்னும்
'இறைஇன்மை' போதித்த சமயம் கூட

அந்தத்தே அடைந்து விடும் நோக்கம் ;அந்த
ஆண்டவனே எனக் கூறல் ஆகும் என்பேன் ;
எனத்தம்மைக் காக்கின்ற இறவன் தானும்
எல்லாமாய் இன்மையுமாய் இருத்தல் ஓர்க!!!!!!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (5-Mar-13, 8:58 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 104

மேலே