துளிர்ச்சி

செயற்கையில்
தூர்ந்துபோன மனிதா-நீ
இயற்கையில் துளிர்த்துவிட வா

இரும்பினை அணைத்தபடி
எத்தனை நாட்கள்? நீ
இனிமையில் வாழ்ந்ததோ
எத்தனை நாட்கள் ?

வறுமையை மறப்பினும்
வயிற்றுப்புழுக்கள்
வருந்தியே வாழ்வதேன்
உங்கள்மனங்கள்?

உன் விழிகளுக்கு
விடியலின் வெளிச்சம்
மின் விளக்காய் போய்விட்டது

உன் வயிற்றுக்கு உணவாய்
நாகரிகம் மாறிவிட்டது

காசுதான் வாழ்க்கை என்னும்
சித்தாந்தம் தோன்றிவிட்டது

தோழா......
உன் வாழ்கையை வாழ்வது
ஜடங்கள் என்று ஆனபின்பு

செயற்கையில்
தூர்ந்துபோன மனிதா நீ
இயற்கையில் துளிர்த்துவிட வா

நீ ஒரு முறையேனும்
நதிகளில் குளித்ததுண்டா?

புட் தரைகளை அணைத்தபடி
புலகாங்கிதம் அடைந்ததுண்டா?

மின்விசிரும் காற்றை விட்டு
மரம்விசிரும் காற்றை
சுவாசித்ததுண்டா?

தளிர்களோடும் கிளைகளோடும்
கொஞ்சி உறவாடி பேசியதுண்டா?

வா .... தோழா வா.....

ஒரு முறை அந்த
விடியலின் வெளிச்சத்தை
விவரணம் செய்துகொள்

பட்சிகளின் வாழ்க்கையில்
பாடம் கற்றுக்கொள்

தளிர்களின் மொழிகளை
மனனம் செய்துகொள்

எந்திர வாழ்கையை அதில்
தகனம் செய்துகொள்

உனக்கென்ற வாழ்க்கையை
ஜடம் வாழ வேண்டாம்
நீ வாழ்ந்துபார்

வாழ்க்கை ரொம்ப அழகானது

தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (5-Mar-13, 10:04 am)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 131

மேலே