பேச்சை நிறுத்தாதே... மூச்சை நிறுத்து..!!!

என்னோடு
பேச மறுத்துப் போகிறவளே.!
நீ போவது
என் பேச்சை நிறுத்தி விட்டா.?
என் மூச்சை நிறுத்தி விட்டா.?
0
0
நீ மறுத்து விட்டால்
மறுத்து விடுமா
உன் நினைவும்...
என் நினைவும்.....
0
0
நினைவில் பேசிக் கொள்ளுமே
நினைக்க நினைக்க
உயிரோடே கொல்லுமே
என் செய்வாய்.?
0
0
உன்னோடு பேசும் வரை
நான் ஊமையில்லை
உன்னோடு பேசாத வரை
நான் உயிரோடில்லை.

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (5-Mar-13, 9:59 am)
பார்வை : 273

மேலே