என் முதல் நண்பன்....!

என் உயிர் தோழன்!
அவன் என் முதல் நண்பன்!
அப்படி என்ன அக்கறையோ
அவனுக்கு என் மேல் ?
நான் எப்பொதும் அழகாய்
இருக்க மட்டுமே விரும்புவான்

அவனை பார்த்தால் போதும்
நான் அழகாகி விடுவேன்!
அழகாக இல்லை என்றாலும்
பல பல ஆலோசனைகள்
சொல்லி அழகாக்கி விடுவான்!

சாலை ஓரம் சேலை ஒன்று
ஓர கண்ணால் பார்க்கும் போது சொல்வான்
"அழகன் டா நீ !"

காதலியை பார்க்க
செல்லும் முன் அவனை
பார்த்தால்
எவ்வளவு அழகாக இருந்தாலும்
இல்லை என்று தான் சொல்வான்!

என் காதலை என்னவளிடம்
சொல்லி முடித்து அவளும்
என் காதலில் திழைத்து
பின்னர் அவனை பார்த்து
சிரித்த போது சொன்னான்…

"நெஜமாவே அழகன் தாண்டா நீ !"

நான் அழும்போது அவனும்
அழுது புலம்பி சொல்வான்
"மச்சி அழாத டா ! உன் மூஞ்சிக்கு இது நல்லா இல்ல!"

நான் கோபப்படும் போது
அவனும் கோபப்பட்டு சொல்வான்
"சிரிப்பு வர்ற மாறி கோப படாதடா!"

என் தோல்வியில் அவனும்
சோகமாகி சொல்வான்
"விடு மச்சி திரிஷா இலனா திவ்யா!"

என் வெற்றியில் அவனும்
மகிழ்ச்சி கொண்டு சொல்வான்
"உன்னால மட்டும் எப்டி மச்சி முடியுது! கலக்கிட்ட போ"

முடிவுகள் எடுக்கும் போது
எனக்கு துணையாக நின்று
சொல்வான்
"நீ எடுக்குற முடிவு சரியா தாண்டா இருக்கும்!"

எடுத்த முடிவு சொதப்பும் போது
ஒன்னும் தெரியாதவன் போல்
சொல்வான்
"நான் அப்பவே சொன்னேன்! கேட்டியா?"

என் மகிழ்ச்சியில்
என் சோகத்தில்
என் வெற்றியில்
என் தோல்வியில்
என் தனிமையில்
என்றும் அவன் இருப்பான்
என் முதல் நண்பனாய்!

எனக்கு இப்படி ஒரு நண்பன்
இருப்பது இவ்வுலகில்
எவருக்கும் தெரியாது!
தெரிந்தால் என்னை பைத்தியம்
என்பார்கள்!

ஆம் உயிரற்ற ஒருவனை
நண்பன் என்று சொல்லி
தனியாக புலம்பி கொண்டிருந்தால்
அப்படி தானே சொல்வார்கள்!

என் முதல் நண்பன்
என் முன்னாடி!
அவன் என் வீட்டு கண்ணாடி!

எழுதியவர் : மாடசாமி மனோஜ் (5-Mar-13, 5:20 pm)
பார்வை : 1061

மேலே