கண்டிப்பா படிங்க .....

நம் எல்லையில் இருவர் தலைகளை
கொய்து சென்றார்களே
அதை இன்னும் நினைத்திருக்கிறோமா ?

டெல்லியில் சில மிருகங்கள்
ஒரு பெண்ணை பலி கொண்டார்களே
அதை இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கிறோமா?

இலங்கையில் நம் இனத்தையே அழித்தார்களே
சிகப்பு கம்பள வரவேற்பு தவிர, அவர்களுக்கு
வேறெதுவும் வழங்கினோமா ?

அமில மழைக்கு ஆளாகி அபலை இறந்தாளே
அவள் வலிக்கு உண்டான தீர்ப்பு
இன்று வரை கொடுத்தோமா ?

இன்னும் எத்தனை எத்தனை துயரங்கள்
அடுக்கிப் பார்த்தால் ,இமயம் தாண்டி ,
எவரஸ்ட் தொடும் நம் வேதனை உயரங்கள் !

ஒரு நாள் சாலைகளை ஸ்தம்பித்து
போராட்டம் நடத்தியும் ,

வீர வாசகங்கள் தாங்கிய வார்த்தைகளை
தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தும,
நம் வீரத்தைக் காட்டினோம் !

அடுத்தநாள் அவரவர் வேலையைப் பார்க்க
விரைவாக நடையை கட்டினோம் !

இப்படியே , மறதி நம் தேச வியாதியாகி விட்டது !
ஒரு நடிகன் சொன்னதைப் போல ,
ஊழலுக்கு நிகராய் ......

காலம் தப்பிப் பெய்த கனமழை
உயிர்பிக்காது கருகிய பயிர்களை !

வருடங்கள் கடந்து வழங்கப் படும் நீதி
வாழ்விக்காது இறந்த உயிர்களை !

தவறிழைத்தவனுக்கு தண்டனை
அன்றே கிடைக்க வேண்டும் என்ற சிந்தனை

இனியேனும் நம் நீதிமன்றம் உணர வேண்டும்
இனி ஒரு உயிர் போகும் முன்னே
வலிய சட்டம் கொணர வேண்டும் !

இது அண்ணலின் அகிம்சை பூமிதான்
யாரும் இல்லை என்று சொல்ல வில்லை .....

ஆனாலும் நாம் மறந்துவிடக் கூடாது
இங்கே தான் நம் சுபாசும் இருந்தார் என்பதை !

ஜெய்ஹிந்த்!

எழுதியவர் : ராஜேஷ் ப (6-Mar-13, 1:57 pm)
பார்வை : 711

மேலே