இல்லம்
என் வீட்டின் எதிரே
ஓர் மாமரம்...
பூக்களும் காய்களும்
குலுங்கும் மரம்...
அணில்கள் ஆடிய மரம்...
ஆடுகள் இளைப்பாற
மின்சாரமில்லா விசிறியாக
வெஞ்சாமரம் வீசிய மரம்...
எல்லாம் இன்றோடு முடிகிறது...
நாளை சாயப்போகிறதாம்...
இல்லம் ஒன்று எழப்போகிறதாம்...
இருப்பதை இல்லாமல் செய்வதால்...
இல்லம் என்ற பெயரோ...?!