ஐயனை, அப்பனை எங்கு நான் தேடுவேன்?

அச்சில் வார்த்தது போல்
அவரை போல்.
என் அய்யாவை தான் சொல்கிறேன்
'தில்லை பிள்ளை" வந்திட்டார்.
கேட்கும் போது என் அம்மாவை
மானசீகமாக நினைக்கிறேன்.

'பளிச்' என்று, நெற்றியில் விபூதி பட்டை
நீரில் குழைத்து போட்டது.
வட்ட கழுத்து வெள்ளை சட்டை
மேல் கைக்குள் நுழைத்த கறுப்பு குடை
கால் விரல்களை மறைத்து
கறுப்பு துணி போர்த்திய காலணி
என் அய்யா இப்படித்தான்

அம்மாக்களை மட்டும்
அருகே நெருங்க விடார்.
தெருவோர பிச்சைக்காரனுக்கு
குருத்து வாழை இலை போட்டு
அமுதிட்டு அக மகிழ்வார்

'அனாதை பிணம்' ஊரில் என்று
அவர் அகராதியில் எதுவுமில்லை.
தன் செலவில் நல்லடக்கம்
நாமெச்ச அவர் செய்யும்
நல்லதொரு இறை தொண்டு
.
அன்னை முகம் அறியாது
அக்காமார் அமுதூட்ட,
செல்ல்த்தொட்டிலில் சீராட்டி
வளர்ந்த அப்பன் என் அப்பன்.

'அய்யா'வின் பெயர் சொன்னால் கம்பத்து
அறியா பிள்ளை கூட சிரித்து வழி காட்டும்.
சாகா வரம் வாங்கி வந்தேன் என்று
மூச்சுக்கு முன்னூறு முறை என் முன்
வார்த்தை வரும் அவர் அமுத திருவாயில்.
வாழ்நாளில் ஒருநாளும் வைத்தியர்
முகம் அவர் என்றும் பார்த்ததில்லை.
இப்படி தான் ஒரு நாளில் அய்யா
சொல்லாமல் கொள்ளாமல்
சிவனடிக்கு போய் சேர்ந்தார்கள்.
அம்மாக்கள இருவருமே
அடுத்தடுத்து போனதனால்
எல்லாமே எனை விட்டு போனது போல்
என் உணர்வு எனக்குள்ளே.



.



.

எழுதியவர் : முருகன் தில்லைநாயகம் (6-Mar-13, 8:04 pm)
சேர்த்தது : அம்பை சுதர்சனன்
பார்வை : 135

மேலே