என் எதிர்கால மனைவியே

அந்நிய பெண்கள்
எனை கடக்கையிலே
தலை தாழ்த்திகொள்கிறேன்
உன்நிழலை தேடியபடி

என் காதுகளுக்கு
ஓய்வளித்து கண்களை
கூர்மையாக்கி எட்டு
திசைகளிலும் தேடி
அலைகிறேன் சத்தம்
இல்லாமல் மௌன
மொழியில் மெய்விழிகளில்
நீ பாடும்
கவிதைகளை தேடி

நான் உனை
தொடாமல் தொட்டு
செல்வேன் மயிலிறகு
வீச பிறப்பெடுக்கும்
தென்றல் காற்றாய்

அதுவும் நீ
பூத்து குலுங்கி
சிரிக்க உனையறியாது
உன் கண்
வேர்க்கும் ஆனந்த
துளி சுவைக்க

மலர்ந்த ரோஜா
சேமித்த துளிகளை
காட்டிலும் சுவையானது
உன் கண்
சுரக்கும் நீர்த்துளி

என் முரட்டு
வேலைகளை அறவே
தவிர்த்து மென்மையானவனாய்
மாற்றம் கொண்டதே
மெல்லினமே உனை
என் உள்ளங்கையில்
நோகாமல் ஏந்தி
பாடி திரியத்தான்

மஞ்சத்தில்
நீ உறங்க
கதை புத்தகமாய்
கரடி பொம்மையாய்
மெல்லிசையாய்
மேனியை வருடும்
தென்றல் காற்றாய்
என உன்
தேவைக்கு இணங்க
மாற்றம் கொள்வேன்

நீ வெட்காமல்
இருக்க உன்
மூக்கூத்தி பொன்கீற்றில்
காமத்தை கொள்வேன்

ஊரை வலம்
வர நடக்கையில்
உன் தோளோடு
தோள் சேர்த்து
உற்ற தோழனாய்
உன்னோடு நடப்பேன்

என் விடுமுறை
நாட்களில் உனக்கு
விடுப்பளிப்பேன்

நீ நீராடி
வருகையில் உன்
கூந்தலை துவட்ட
துண்டோடு காத்திருப்பேன்

வீட்டிலேயே அழகுநிலையம்
அமைத்து உனை
அலங்கரித்து ரசிப்பேன்

இன்னும் தொண்டை
அடைக்க எண்ணிலடங்கா
ஆசைகளுடன் காத்திருக்கும்
உன் எதிர்கால
கணவன்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (7-Mar-13, 1:36 am)
பார்வை : 765

மேலே