உன்னிடம் கற்றுகொள்ள...

துக்கத்தில் இருக்கும்
உன்னை???,,,,,

கண்டுகொள்ள
வருவதற்க்கு என்
ஆயத்தங்களின்
அவலங்கள்.,


காய்ந்த தலையுடனும்,
கசங்கிய சட்டையும்,
கவராத உடையும்
சவரம் செய்யா
ஒரிருநாள்
தாடியுடனும்,

மிளிரக்கூடதெனும்
முனைப்புடன்
மங்களாய்
தெரிகிறேன்,

பிரயாணத்தின்
பேருந்தின் குத்துபாட்டிற்க்கு
கும்மாளமிட்ட விரல்கள்
அசைபோட்ட வாய்கள்,
அடங்கி போனது
உன் ஊர் எல்லையில்,

தயார் நிலையில்
முகச்சோர்வை
யாரோ நிறுத்திய
குதியுந்தியின்
கண்ணாடியில்
ஒரு முறை
சரிபார்த்து,

சோகமாய்
சோர்வாய்,
பேசப்போகும்
வார்த்தைகளை
மனனம் செய்தபடி
உன் தெருமுனையில்
நடை சுறுக்கி,

ஒத்திகையில்
சரியாக,
உன் வீட்டு
அழைப்பு மணியில்
நடுங்கும் விரல்கள்
மணியடிக்க,

வரவேற்பது
யாராய் இருக்கும்
என்ற கவலையிலும்,
விசாரிப்பில் விசும்புவதா
வேண்டாவா என போராடும்
மனதை அடக்கி
காத்திருக்க,

புன்சிரிப்புடன்
தாழ் நீக்கும் உன்னை
என்ன சொல்ல?
ஏன் பராரியாய்
வினவும் விழிகளை
ஏறிட கூச்சமாய்
தாழ்ந்து போகிறது
மனமும் தலையும்,

விசாரிக்க வந்தவனிடம்
விசாரிக்கும்
வேதனையில் நான்,

துக்கத்தைக்கூட
நடைமுறையில்
ஒரு நாள் போல்
ஒத்துக்கொண்டு
அடுத்த கட்டத்தின்
ஆர்பரிப்பில் நீ...

நீ
என்றுமே புதிர்,
மீண்டும் ஒரு பாடம்
கொடுத்து விட்டாய்
எனக்கு
உன் பாதையில்
என் பயணம்
எப்போதும்
தொடரும்,

நீ
மாறவே இல்லை,
எனக்கு எப்போதும்
மாற்றம் ஏமாற்றம்தான்,??

எழுதியவர் : சபீரம் sabeera (7-Mar-13, 1:33 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 102

மேலே