என் மன தோட்டத்தில்

உன்னை பார்த்தபொழுது
என் இதயத்தில் இனம்
புரியாத மகிழ்ச்சி
நீ என்னோடு பழகிய
நாட்கள் என்றும்
நறுமனமாய் என் மன தோட்டத்தில்
நான் வேறு நீ வேறு
என்று விலகி விட்டாலும்
உன்னை பார்த்த பொழுது
என் மனம் தவிக்கிறது
காரணம் புரியவில்லை
என் மனதில் உன் அன்பை
பதியம் செய்து விட்டு
வேறு தோட்டத்தில் உன்னை
நட்டு வைத்து விட்டனரை
இது யார் செய்த பிழை?
மனம் என்னும் தோட்டத்தில்
நீ என்றும் தென்றலாய்
வந்து தாலாட்டு பாடுகிறாய்
உன் நினைவுகள் என் மனதில்
என்றும் வசந்தமாய் தவழ்கின்றன
என் மனத்தோட்டத்தில்
உன் நினைவுகள் என்றும் நறுமணத்தோடு
என்னை கடந்து செல்கிறது

எழுதியவர் : ஸ்ரீ தேவி சரவணபெருமாள் (7-Mar-13, 5:58 am)
சேர்த்தது : sridevisaravanaperumal
Tanglish : en mana thottathil
பார்வை : 169

மேலே