என் மனைவி முன் ஜென்மத்தில் குரங்காக.. இருந்திருந்தால்.. ??

இது சிரிக்க..! சிந்திக்க..!!

என் குரங்கு மனைவிக்காக மட்டுமே ..!
அம்மாவின் திருவுருவம் நியடி...
அட குரங்கின் ஜாதியே...
அதுதான் ?
உன் சிரிப்பின் மீதியே..!!

நேற்று பெய்த மழைத்துளி
இன்று உன் முகமாய் மாறுதடி..!
அந்த தென்றல் காற்று
உன் பார்வை மனம் வீசுதடி.
சிரித்தும், தீண்டிச்செல்லுதடி..!

கருப்பு மேகம் கருப்புவாசகத்தின்
சேட்டையை நறுக்க சுற்றுதடி
என் மனதோ உன்னைச் சுற்றுதடி

அலையும் குரங்கை ஆழ்ந்து பார்த்தல்
அங்கும் உன் நினைவு உள்ளதடி
ஆயிரம் குரங்குகளின் மத்தியிலும்
உன் குரல் எனக்கு கேட்குதடி..!

அரை அடி உயரத்தில்
நின்று பார்த்தால் மரக்கிளையில்
உன் பிம்பம் துள்ளுதடி..! ஆடுதடி..!
நீ..! செய்யும் சேட்டையில்
என் சிரிப்பு உள்ளதடி

என்னை அன்பில் மிதக்க வைத்தவள் நீயடி
என் அத்தனை சந்தோசத்திலும் நியடி
உன்னை பிரிந்தால் நான் எப்படி....

தனிமை பிரிவின் வலியால்..!
நானும் என் மனைவியாளும்..!


ஒவ்வொரு கணமும்
உன்னை நினைத்திருக்க ஆசைதான் ?
ஓயாது கதை பேசி
உன்னுடன் விழித்திருக்க ஆசைதான் ?

உன்னோடு உறவென்று
ஊரெல்லாம் சொல்ல வைத்தாய்..
உன் புருஷன் நானென்று
ஓயாமல் சுற்றி வந்தாய்..

இன்று பிரிந்து நான் எங்கு சென்றாலும்
என் நினைவில் வருவது ஒன்று தான் ?
அதுவும் நான் உன்னுடன்
இருந்த கடைசி நாட்கள் இரவு..!
காற்றலையில் கேட்ட உன் குரலோடு..!

மதுரை கருப்பு வாசகம்
மழைத்துளியில் சிரிப்போடும்..!
மனதளவில் வெறுப்போடும்..!

எழுதியவர் : மதுரை கருப்புவாசகம் (7-Mar-13, 4:09 pm)
சேர்த்தது : vasagam jasmine
பார்வை : 175

மேலே