அனைத்திலும் பெண்கள்
அனைத்திலும் பெண்கள்,
சமையலறை புனைகளாக இருந்தவர்கள் இன்று
சரித்திரத்தில் தங்கள் பெயர் பதித்தார்கள்
அன்று அடக்கு முறை ஏவப்பட்டது இவள் மீது
ஆட்சி அதிகாரத்தில்(தமிழகத்தில்) அமர்ந்தாள் இவள் இன்று
மறுக்க பட்டது கல்வி அன்று
மருத்துவத்தில் சாதனை புரிந்தால் டாக்டர் சாந்தா இன்று
அடுப்பு எரிக்கும் பெண்ணுக்கு படிபெதற்கு
சொல்லியவனின் வாயை கிழித்து விண்ணில் பிறந்தால் கல்பனா சாவ்லா இன்று
இப்படி எத்தனை எத்தனை சாதனைகள்
இன்று சமயலறையிலும் பெண்கள் - சமுக சேவையிலும் பெண்கள்(அன்னை தேரேசா )
விவசாய நிலத்திலும் பெண்கள்
விண்வெளியிலும் பெண்கள்
சங்கிதத்திலும் பெண்கள்
சாலையை சுத்தம் செய்வதிலும் பெண்கள்
அலுவலங்களிலும் பெண்கள்
அட்சி அதிகரங்களிலும் பெண்கள்
அரளிவிதைக்கி சொந்தக்காரி இன்று
அரியணை ஏறி இருக்கிறாள்
இது அத்தனையும் பார்க்கும் போது
பெரியாரின் கணவு பலித்தது
பாரதியின்
புகைப்படம் கூட சிரித்தது....