ஒழுக்கம்

போற்றாதான் தெய்வமில்லை
போற்றிவிட்டால் மனிதனில்லை

ஆற்றின் கடமையாய்
அநியாயமில்லை

ஆற்றாதான் வாழ்வுதனில்
அதிசயமில்லை

சேற்றிலே தவறுவான்
வேந்தனே ஆயினும்

வாட்டிடும் உலகமே
வல்லனே போற்றினும்

கேட்டிடு கேண்மையாய்
ஒழுக்கமே முடிவினில்

தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (8-Mar-13, 10:52 am)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 135

மேலே