பெண்மையே . . .

தாயாய்த் தங்கையாய்
தோழியாய் துணைவியாய்
மகளாய் மதிப்பாய்
மருமையிலும் துணையாய்
வருபவளே !

நதியாய்ப் பெருக்கெடுத்து
நானிலம் செழிக்கவைத்து
நன்றி கெட்ட மானிடர்
நலம் பேணச்
செய்பவளே !

ஆதியாய் சோதியாய்
அகிலம் முழுதுமாய்
ஆதர வளித்தாங்கே !
நிதர்ச னமாய்த்
திகழ்பவளே !

பெண்மையே அம்மையே
பேரின்பமே பேரருளே
உற்ற தாய் உன்னையே
உண்மையில் வணங்கிடில்
உலகினில் உயர்வாரே
உத்தமராய்.

எழுதியவர் : raja (8-Mar-13, 10:56 am)
பார்வை : 163

மேலே