மழை
பொழிந்து ஊற்றும்
மழையும் ..
பொறுத்து சிவந்த
மண்ணும் ..
ஒன்றையொன்று
ஆரத்தழுவிக் கொள்கின்றது ...
மழை வந்ததினாலோ
என்னவோ ...
மண்ணுக்கு குதூகலம்
புதுமனை விழாவிற்கு
புற நகரத்து
மேகங்களெல்லாம்
படையெடுத்து வருகிறதோ ?
மழையோடு
தன் பெயரையும்
எழுதிவிட்டு மறைந்தது
மின்னல் கீற்று ..
மழையோடு
புது இசைக்கு
ஒத்திகை பார்த்துச் சென்றது
இடியோசை ..
மழையோடு
தன் பெயரையும்
பட்டியல் இட
போராடியது
சூராவளி .
மழை
மண்ணிலே
இருளைப் பரவவிட்டு
நடிக்கிறது
பகல்முழுதும் ..
மண்ணை
குழைந்தை போல்
கொஞ்சிவிளையாடுகிறது .
வசந்த காலத்து
கவிப்பூக்களுக்காய்
மழையை
கைதட்டி வரவேற்கிறது
மரம்
மலை இடுக்குகளில்
இருந்து
கொட்டும் மழைநீரில்
நீரடிக்கொள்கிறது
காட்டுப்பூக்கள்
மேகம் தூவிய
தூரலில்
பாடல்கள் தேடுகின்றன
ஏரிகள் ..
படிக்கத் தெரிந்த
மனிதனைவிட
படிக்கத் தெரியாத
உயிரினங்கள்
பாடம் படிக்கிறது
மழையில்
மழை
ஒரு சொட்டுக் கண்ணீராக
பல குரல்களின் சிரிப்பாக
எதிரொலிக்கிறது மண்ணில்
மழை நின்ற பின்பும் ..
மண்ணுக்கு
அறிமுகமாகும் மழை
மண்ணோடு
சங்கமமாகி விடுகிறது
ஈற்றில் ...
கடல் புத்தகத்தில்
புதிதாய் எழுதப்பட்ட
திரவக்கவிதையை
முத்தமிட்டு
திறந்து வைக்கிறான்
சூரியன் .