அம்மா...........

அம்மா என்ற சொல்லுக்கு
அகராதியிலும் பொருளில்லை.
அதற்கு அர்ததமே நீதானம்மா..
அம்மா உன் பால்தானே
அற்புதத் தடுப்பு மருந்து.

பசி வரும் நேரங்கண்டு
பார்த்துப் பார்தது ஊட்டினாய்
என்னுடல் வளர்ப்பதற்கு
உன்னுடல் வருத்தினாய்.
உயிர் கொடுத்த தெய்வம் நீ

மொழி தந்து முறைதந்து
வழி காட்டி வாழ வைத்தாய்.
பழிவராப் பக்குவமாய்
பதமாகச் செதுக்கினாய்
பணிகிறேனுன் பாதமலரே.

தாயினும் சிறந்தது தரணியில்
ஏதுந்தான் உண்டோ அம்மா
கோயிலும் நீதானம்மா- எனக்கு
குலதெய்வம் நீதானம்மா..
கும்பிட வேறெங்கு போவேனம்மா.

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா. (8-Mar-13, 7:03 pm)
பார்வை : 129

மேலே