இதயமும் துள்ளிடும்

நீரைத் தொடும் வானோ
நெஞ்சைக் கிள்ளுகிறது !
நிலத்தின் வண்ணமோ
உள்ளத்தை வருடுது !
சோகத்தை சுமந்திடும்
சுமைமிகு இதயமும்
இதமாகி சுகமாகும்
எழில்மிகு சூழலால் !
இயற்கைக் காட்சியால்
இன்னலுறும் நேரமும்
இன்பமாய் மாறிடும்
இதயமும் துள்ளிடும் !
பழனி குமார்