ஒலி சிகிச்சை ....Phonemic Intelligence

தேர்வு நேரங்களில் அழுத்தத்தில் இருந்து மாணவர்கள் விடுபட, ஒரு புதிய அணுகுமுறை
பதிவு செய்த நாள் - மார்ச் 08, 2013 at 9:06:50 PM
தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து மாணவர்கள் விடுபட, ஒரு புதிய அணுகுமுறையைக் கண்டு பிடித்துள்ளது சென்னையைச் சேர்ந்த திரிபுரா அறக்கட்டளை என்கிற தனியார் அமைப்பு. சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியுடன், சில மூளை அறிவியல் மையங்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தி இருக்கின்றன.

மாணவர்கள் திறம்பட தேர்வு எழுத...மன அழுத்தத்தைக் குறைக்க புதிய முறை:
தேர்வுக் காலம் தொடங்கியாற்று... மாணவர்கள் பலரை மன அழுத்தம் தொற்றிக் கொள்ளும் நேரம் இது. இந்த மன அழுத்தத்தில் இருந்து மாணவர்கள் விடுபட, மரபு சார்ந்த தீர்வுகளைத் தவிர்த்து, புதிய முறையைக் கண்டுபிடித்திருக்கிறது சென்னையைச் சேர்ந்த திரிபுரா அறக்கட்டளை. அதன்படி, குறிப்பிட்ட சப்தத்தின் மூலம் மாணவர்களை அழுத்தும் தேர்வு பயத்தையும், மன அழுத்தத்தையும் தவிர்க்க முடியும் என்கின்றது இந்த அமைப்பு.

நம்பிக்கை மையம் மூலம் ஒலி சிகிச்சை : "ஒலி சிகிச்சையால் நல்ல மாற்றங்கள்"
இந்த ஒலி சிகிச்சையை செயல்படுத்தும் "Phonemic Intelligence" என்கிற முறையை, "Hope Centers" எனப்படும் மையத்தின் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கும் கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முறையை செயல்படுத்துவதன் மூலம் தேர்வு நேரத்தில், மாணவர்கள் மன அழுத்தம் இன்றிக் காணப்படுவதோடு, தலைமைப் பண்பு உள்ளிட்ட நல்ல குணங்களுடனும் காணப்படுவதாகக் தெரிவின்றனர்.

தேர்வுக்கு மனதளவில் தயாராக... : ஒலி சிகிச்சைக்கு அணுக - 95661 99177
சென்னை, எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பங்களிப்போடு இந்த ஒலி சிகிச்சை முறை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு தேர்விற்கு பாடத்திட்ட அளவில் எவ்வளவு தயாராக வேண்டுமோ அதே அளவிற்கு மனதளவிலும் தயாராக வேண்டும் என்பது இந்த பயிற்சியின் முக்கிய அம்சம். தேர்வு நேர மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் இந்த ஒலிப் பயிற்சியைப் பெற விரும்பும் மாணவர்கள் 95661 99177 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

எழுதியவர் : புதியதலைமுறை செய்தி சேனல (8-Mar-13, 9:13 pm)
பார்வை : 147

மேலே