ஒரு பொன்மாலைப் பொழுது (1)

.." ஒரு பொன்மாலைப் பொழுது:...
பெண் : ' ஏன் இவ்வளவு தாமதம்?'
ஆண் : ' உள்ளதைச் சொல்லவா..? உள்ளதை இல்லயென்று
சொல்லவா...?'
பெண் :' உண்மையை உரைப்பீர்...'
ஆண் :' நிதானமாக சொல்லவா...? நிற்காமல் சொல்லவா..?'
பெண் : 'நடந்ததைச் சொல்லவும்..''
ஆண் : 'சொல்லிவிட்டு நடக்கவா...? நடந்து கொண்டே
சொல்லவா..?'
பெண் : .....................................
ஆண் : 'ஏன் மெளனம்?'
பெண் : ..........................................
ஆண் : 'கோபமா...? சொல்லிடு இனியவளே'
பெண் : 'இனி இவள் இல்லை என்று நினைத்துக் கொள்ளும்'
ஆண் : 'இவள் இல்லையென்றால், இவன் இல்லை என்பதை
நீ அறிவாயோ... சொல் கண்ணே...'
பெண் : 'கண்ணுக்குள் ஈரம் இருப்பதால், கரைந்து போகுமுன்
விலகிப்போகிறேன்'
ஆண் : 'நில் சொல்லி விடுகிறேன்.... நில்லடி......
நில்லாமல் போய் விட்டாயா?' 'நாளையாவது நான்
சொல்லப் போறதைக் கேட்பாயா?'