வெறுமை

இரவின்
கரங்களைப்பற்றிக்கொண்டு
தூக்கத்தால்
கனவுகளையும்
பற்றிக்கொள்ள துடிக்கும்
தருணமிது ...

சலனமற்ற
என் நினைவோடையில்
சில சமயம்
உன்னால் ஓரிறு
கூழாங் கற்கள்
எறியப்பட்ட போதெல்லாம்
என்னையே
நொந்து கொள்கிறேன் .

சுயம்வரம் காணாது
சுயமாய் இணைந்த
இதயங்களுக்குள்ளுமா
இத்தனை
இடர்களும் ,இன்னல்களும்

நினைவில் நீ இருப்பதால்
பௌனமியாய்
என் கனவுகள்
என் நினைத்தேன்
அதே கனவு
அமாவாசை இருளில்
மூழ்கப் போவதினை
அறியாமல் தானா ?

என் எண்ணங்கள்
ஆயிரம் வர்ணங்கள்
கொண்டதென நினைத்தேன்
வெள்ளையும் ,கருப்புமே
என் எண்ணத்தின்
வர்ணங்கள் என்று
தெரியாமல் தானா?

அத்தனையும்
அழிந்து விட்ட பிறகு
வர்ணங்கள் சுரண்டப்பட்ட
வானவில்லின்
வளைவுகள் மட்டுமே
மிச்சம் போன்று
வெறுமையாய் இருக்கிறேனே
நான் ....

எழுதியவர் : ஹபீலா ஜலீல் (9-Mar-13, 8:11 pm)
சேர்த்தது : hafeela
Tanglish : verumai
பார்வை : 112

மேலே