சந்தித்த போதெல்லாம்
![](https://eluthu.com/images/loading.gif)
பல நினைவை நினைவாக்கி வைத்த காதலது...
பஞ்சாங்கம் பார்த்து பறந்தேறிப் போவதேனோ...
கதை பேச வழியிருந்தும், அறை கூவல் நான் விடுத்தும்...
வழி பார்க்கும் போதெல்லாம் பொய் பார்வை கூட இல்லை ஏனோ...
வீதி வழியே பொதுச்சந்தி... இருவரின் காரியாலய பொது சந்தி கூட அதுவே...
காதலது ஆதியிலே கடக்கையிலே சிந்திய சிரிப்பை...
இப்போது கடக்கையிலே நெருப்பாக்கி விடுவதேனோ...
சந்திக்கும் போதெல்லாம் நினைக்கின்றேன் ஒரு முறையாவது சிந்திக்க மாட்டாயா என்று...