மதிப்போம் முதியோரை

மூப்பின் வயதோ முகத்தில்
முதுமையோ முக வரியில் !
நோக்கும் பார்வை உணர்த்தும்
எண்ணிடும் வாழ்வின் முடிவை !
வருத்தம் வழியுது விழிகளில்
கடந்திட்ட வாழ்வை நினைத்து !
இறுதிவரை இருப்பது கோலும்
ஊன்றி நடந்திட துணையாய் !
கட்டியவனும் சென்று விட்டான்
பிறந்தவனும் விட்டு விட்டான் !
ஊசியாய் குத்துகிறது உள்ளத்தில்
உதிரமும் வடிகிறது கண்களில் !
நம்நிலையும் நாளை இதுதானா
நாளை நடப்பதை யார் அறிவார் ?
என்றும் மதிப்போம் முதியோரை
முடிந்த அளவு உதவிடுவோம் !
பழனி குமார்