தமிழனுக்குத் தமிழனே எதிரி...
செய்தி:
சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் மற்றும் 80 தோழர்கள் கைது, காவல்துறை 2 மணி அளவில் உண்ணாவிரத பந்தலில் உள்ளே நுழைந்து நாற்காலிகளை உடைத்து கதவைப்பூட்டி கைது செய்தது. உண்ணாவிரத பந்தலுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஆழ்மனதில் தோன்றியது:
அவர்களுடன் சேர்ந்து தமிழ்மக்கள் நாமும் உண்ணாவிரதம் இருந்திருந்தாலாவது ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கும்...கண்டிப்பா நானும் ஏதாவது செய்யனும்...
நிஜ உலகம்:
மணியைப் பார்த்ததும்....ஐயய்யோ... வேலைக்கு மணி ஆகிறது... லேட்டா போனா போச்சு...குளிக்கத் துண்டை எடுத்துகொண்டு ஓடுகிறேன்....
வெட்கத்துடனும் கவலையுடனும்
நானும் எதிரி...