அறிவின் முதிர்ச்சி

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.

என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப்பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.

இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..

இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுது கூட,அவரது மனத்தைக் காயப்படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு.

எழுதியவர் : (11-Mar-13, 7:59 am)
சேர்த்தது : dkmalathi
பார்வை : 111

மேலே