"விலகியும் விலகாத "

..."விலகியும் விலகாத"....

ஒவ்வாத நினைவுகளென்று ஒதுக்கி வைக்க முடியவில்லை..
எவ்வாறு முயற்சித்தாலும் முரண்படும் மனது,
தாறுமாறாக கட்டவிழ்த்தோடுது நீ சென்ற தடம் தேடி...

கட்டுப்பாடுகள் இல்லாத எல்லையற்ற எனது,
ஏக்கங்கள் உன் மறைவின் எதிரொலியில்
முடங்கியே கிடப்பதால் மௌனம் பீறுகொண்டு
பேரழுகையாக வெடித்து சிதறுகிறது......

அலைபேசியில் அழைக்கின்றேன் அனுதினமும்,
அழைக்கும் எண் பயனீட்டில்லை என்று,
அசீரிரீ குரல் போல் ஒலிக்கின்றது கணிணி,
கணிணிக்குத் தெரிந்த உண்மை காதலித்த மனதுக்கு,
புரிந்தும் ஏற்றுக் கொள்ள ஏனோ மறுக்கின்றது.....

எனக்காக நீ பாடிய பாடலை என்றோ,
அலைபேசியில் பதிவாக்கியது இன்று,
என் இதயத்துடிப்பை இயங்கிட செய்கின்றது...

இனி எனக்கான துணை என்றென்றும் உன்
அலைபேசி எண்ணும், அருமையாய் நீ பாடிய
"உன் கண்ணில் நீர் வடிந்தால்..." என்ற பாடலும் தான்...

துக்கத்தின் எல்லை மரணம் தானென்கிறது மனம்,,
மரணிப்பது உன் நினைவுகளை அழித்திடுமென்கிறது அறிவு
மனதிற்கும் அறிவுக்கும் இடையில் தடுமாறுகின்றது நிதர்சனம்

வாழ்வின் எல்லையில் காத்திருக்கின்றேன் வைராக்கியத்துடன்
வசந்தத்தை எதிர்பார்த்தல்ல,,,, உன்வசம் வரும் நாளுக்காக..

எழுதியவர் : (11-Mar-13, 7:59 am)
பார்வை : 87

மேலே