இரவு:-

வான் கதிரொளியில் குளிக்கையில் ஆணாக
குளித்து வெளிவர பெண்ணாகுமே…

வின்மீனும், நிலவும் தன்னை அலங்கரித்து
பெண்வானில் பொன்னாக மின்ன
குளித்த வானம் உலகம் களிக்க
அளிக்கும் வரத்தின் பெயர் நீயே...

கடலலைகள் நின் குளிர்வாங்கி
அலையாக கடல்நீர் தலைவார
உலகத்தின் ஓசைகளை உன்னில் ஒடுக்கி
உயிர்களின் உடலாசைகளை எழுப்பி அடக்கினாயே…

எழுந்த ஒளியில் உணவுக்காக உடல் உழைக்க
விழுந்த ஒளி இதமாக, இரவின் மடியாக
உழைத்த உடல் களைப்பு நீங்க
பூமி தரும் தாலாட்டும் நீயே...

காலம் நாட்களாக தினம் வெட்ட
வெட்டும் நாட்களை வளர்ச்சியென நினைக்க
நடந்ததை நினைப்பதும் உன்னிடத்தில்
கடந்ததை மறப்பதும் நின்னிடத்தில்.

உன்னிருளில் தீயமுகம் பலவும் ஒளிரும்
கற்பனையும் நீயே, கவிதையும் நீயே
உறவை வளர்க்கும் தருவும் நீயே
உலகை இயக்கும் உயிரற்ற உயிரும் நீயே!

உருளும் நாளின் ஒரு முகம்
உலகத்தின் உயிரை பெருக்கி
கரு பிடிப்பதும் உன்னிடத்திலேயே
கண்மூடி உயிர்கள் மடங்குவதும் நின்னிடத்தில்.

நன்றி

வாழ்க வளமுடன்

ரா.சிவக்குமார்

எழுதியவர் : ரா.சிவக்குமார் (11-Mar-13, 10:12 am)
சேர்த்தது : siva71
பார்வை : 80

மேலே