கண்ணைக் கட்டுதே கலப்படம் - தினகரன் வசந்தம் 10-03-2013

கலப்படம் என்பது வணிக தர்மத்தை மீறிய கொடுஞ்செயல். நம்பிக்கை துரோகம். இன்று நாம் பயன்படுத்துகிற பல்வேறு பொருட்களில் 25% க்கு மேல் கலப்படம் செய்யப்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

எந்த பொருளில் எதை கலக்கிறார்கள்...

பால்: யூரியா, ஜவ்வரிசி மாவு, சோப்பு தூள், இவைதவிர மாடுகளுக்கு போடப்படும் ஆக்சிடோசின் போன்ற மருந்துகளும் பாலில் கலந்து விடுகிறதாம்...

மஞ்சள் தூள்: நிறத்திற்காக லெட் குரோமேட் என்ற ஆபத்தான வேதிப்பொருள் கலக்கப்படுகிறது.

தேநீர் தூள்: புளியங்கொட்டை, முந்திரித்தோல், ரசாயன வண்ணப்பொடி, இளவஞ்பஞ்சு, மஞ்சனத்தி இல்லை, மற்றும் பயன்படுத்திய டீத்தூள்.

சமையல் எண்ணெய் : ஆர்ஜிமோன், பெட்ரோல் தயாரிக்கும் கச்சா எண்ணையில் எஞ்சும் மினரல் ஆயில், ஆமணக்கு எண்ணெய் & கடுகு எண்ணெய்.

மிளகாய் தூள்: செங்கல் பொடி, ரசாயன வண்ணப்பொடி.

மல்லி தூள்: மரத்தூள், குதிரை சானத்தூள், ரசாயன வண்ணப்பொடி.

மிளகு.: பப்பாளி விதை.

சர்க்கரை: ரவை.

கடலை பருப்பு: கேசரி பருப்பு.

நெய் : வனஸ்பதி.

அரிசி: கல், தரம் குறைந்த அரிசி

காபி : சிக்கரி, பேரிச்சை பொடி, முந்திரிகொட்டை தூள்..

பெருங்காயம்: மண், பிசின்.

கடுகு: ஆர்ஜிமோன் விதைகள்.

பச்சை பட்டாணி: ரசாயன வண்ணப்பொடி.

சீரகம் : நிலக்கரி தூள், புல்விதை..

வெல்லம் : மேட்டானில் என்ற ரசாயன நிறமி, சலவை சோடா, சாக்கட்டி தூள்.

பாக்குத்தூள்: மரத்தூள், ரசாயன வண்ணப்பொடி,.

குங்குமப்பூ.: உலர்ந்த சோள நார்கள்.

லவங்கப்பட்டை: ரசாயன வண்ணப்பொடி கலந்த தரம் குறைந்த கருவாய்பட்டை

உப்பு : சுண்ணாம்பு தூள்கற்கள்.

(இன்னும் நிறைய இருக்கிறது.... என்ன நம்மவர்கள்
பெரிய விஞ்ஞானிகள் தானே....)

இதை பதிவு செய்வதற்காகத்தான் இங்கு வந்தேன் மேலும் நேரம் கிட்டும் பொழுது வருவேன்.) நன்றி மு.ரா.
எழுதியவர் : திரு வெ.நீலகண்டன்.

எழுதியவர் : வெ.நீலகண்டன்... (11-Mar-13, 11:24 am)
பார்வை : 246

மேலே