சிம்மாசனம்
மதிப்பீடு செய்வதிலிருந்து விதிவிலக்காய்
நம் முன் வியப்பைக் கூட்டுவது
யாரும் யாரிடமிருந்தும்
அவ்வளவு எளிதாய் அபகரிக்கவியலாது
நாம் மறந்த நிலையிலும்
நமக்காக என்றும் மடி விரித்திருப்பது
ஒருமுறை ஏற்றபின்
நினைவுகள் நிலைக்கும்வரை
நமக்காக காலமும் காத்திருப்பது
ஏற்றத்தாழ்வுகளை எடைபோடாமல்
சமச்சீராய் சீர்தூக்கிப் பார்ப்பது
நம்மை எப்போதும்
உயரத்தில் வைத்திருப்பதையே
உன்னதமென நினைப்பது
அது ஒரு சிம்மாசனம்...
நட்பெனும் சிம்மாசனம் !