கவிஞனும் ஒரு தாய்தான்!
கவிஞன்...................
கவிதைக்
குழந்தைகளை
பிரசவிக்கிறான் .
சில கவிதைகள்
சுபமாகவும்
சில கவிதைகள்
சிரமப்பட்டும்தான்
பிறக்கின்றன
அந்தப்
பிரசவ வேதனை
என்னென்பதும்
பெற்றவளறியும்
பேரின்பமே.
ஆகவே
கவிஞனும் ஒரு
தாய்தான்.......................
பிள்ளை அவனதானாலும்
பிறர் போற்ற
மகிழும் தாய்தான்
கவிஞனும்........................
அது .
ஊருக்கு நல்லதானால்
உத்தமப் பிள்ளை.............
அதுவே
பேருக்குப்
பிள்ளையானால்
யாருக்குத்தான்
இலாபம்............................?