காலைப் பொழுது.

சின்னஞ் சிறு பொழுதது,,
சேவல் கூவி எழுப்புகிறது.
கன்னங் கருமையும் கரைகிறது,
கதிரவன் வரவும் வளர்கிறது.

ஊதல் காற்றும் இதமாக,
உலவ வருகுது பதமாக,
பறவைகள் கூடிப் பாடியே
பரவும் வரவு செய்கிறது.

பனியில் நனைந்துதான்,
பாவமிரவும் குளிர்ந்ததோ!
மெல்லவே போர்வையிருள்
செல்லமாய் விலக்குதே..

மங்களப் பாவையர்,
மஞ்ள் பூசி நீராடி
திங்ககளை வரவேற்க
மாக்கோலம் வரைகிறார்.

ஆழ்ந்த நல்லுறக்கமோ!
ஆதவன் கண்சிவந்தான்..
வாழ்வாதாரம் தேடவே
வழியனுப்பி வாழத்துகிறான்.

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ..பிச்சையா. (12-Mar-13, 9:12 am)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 236

மேலே