உனக்காக உளறியவை-1

மறு ஜென்மத்தில்
எனக்கு நம்பிக்கையில்லை
அப்படி ஒன்று இருந்தால்...
அது இப்போதே வேண்டும்
அப்போது என்னோடு
நீ வேண்டுமடி நிஜமாக....!!!!

.............................................

விட்டு விட்டுத் துடிக்கும்
இதயம் கூட...
ஒரு வினாடி கூட விடாமல்
உன்னையே நினைக்குதடி.!!!!
........................................................

எத்தனை உறவுகள்
எனக்கிருந்தும்....
உன் உறவில் தான்
உள்ளம் மலருதடி.!!!
.......................................................

எந்தப் பிரிவும்
என்னை எதுவும்
செய்வதில்லை
உன் பிரிவு மட்டும்
என்னை எதுவும்
செய்ய விடுவதில்லை.
...........................................................
உன் அன்பிற்கு நிகராக
நான் அன்பை தந்தேனா
தெரியாது-அதற்காகத் தான்
நான் என்னையே
உன்னிடம் தந்து விட்டேன்.
...................................................
உன் நலன் கருதி
பிரிய நினைத்தாலும்....
உன் மனம் கருதி
உறவை தொடர்கிறேன்...
பிரிவிற்கு மனு போடும்
பிற பித்துக்களை
பிய்த்துப் போடு
உறவுக்கு உயில்
எழுதி தருகிறேன்.
...............................................
நீ போகும் இடமெல்லாம்
நிழலாய் தொடர்ந்து வர ஆசை
நீ என்னை நிஜமாக
கூட்டிச் செல்வாய் என்றால்...

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (12-Mar-13, 8:15 am)
பார்வை : 206

மேலே