வெறுப்பாயா ...?
நேற்று நீ என்னை
அழ வைத்து விட்டுச்சென்றாய்
உனது வாசனையாவது
என்னிடம் விட்டு செல்லவில்லை
நட்சத்திரங்கள் கூட
அழுகின்றது ...
என் கண்ணீரை கண்டு
என் வாழ்கையை
பறித்துகொண்டு
எங்கே சென்றாய் ..?
இந்த கண்ணீர்
உன்னை தேடி அலைகின்றது ...
கண்ணீரை வாழ்நாள் முழுக்க
பரிசாக தந்து விட்டாயோ ..?
என் அன்பை வெறுத்து
நீ எப்படி இருப்பாய் ....
சொல் ....சொல் என் உயிரே ..?
இல்முன்னிஷா நிஷா