காதலித்துப்பார் ............!
![](https://eluthu.com/images/loading.gif)
என் காதலனே ....!
உண்மையைச் சொல்லவா ....?
இல்லை ....,
என்னுள் மறைத்த
பொய்யான மெய்யை சொல்லவா .....?
தினந்தோறும் பேசிக்கொண்டோம் ...!
ஒரு நாள் உன் வார்த்தையை
கேட்காவிட்டாலும் ..,ஐயோ .... என்று
தனியறையில்
என் தலையணை கண்ணீரோடு ...,
கரைந்து விடுகிறேன்....!
யோசித்து பார்த்தேன் ......,
ஏக்கத்தில் கரைந்தது ...,
உயிரா ....? உள்ளமா...? என்று ....!
உயிரும் உள்ளமும்
மாற்றி மாற்றி சண்டையிட்டன ...!
உன் நினைவுகளோடு தான்
வாழ்கிறோம் என்பதை மறந்து ....!
நன் மட்டும் இங்கிருக்க ......,
என் நினைவுகள் என்னை மறந்து ....,
எங்கோ உனக்குள் இருக்கும் ....,
என்னைத் தேடி சுற்றுகிறது .......!
நானோ என்னை மறந்து
சிரித்தேன் "பைத்தியம்"
என்ற பட்டத்தோடு .....!
காதல் புனிதமானது....!
அதில் காமம் கலக்காது
என்று கேள்விப்பட்டிருப்போம்.......,
உண்மையை சொன்னால் .....,
அது காதலை நேசிக்காதவர்கள் மட்டும்
சொல்லிச் செல்லும் வெட்டித்தனம் ......!
ஏனேன்றால் .....,
காதலே காமம் தான்....!
இதில் அதற்கு மட்டும்
ஏன் தனிப்பதிவேடு .....!
என்னவனின் நினைவுகளோடு ........
என் உணர்வுகள் உரசி கொள்ளும் போது ....
என் நெஞ்சம் பஞ்சாய்
பற்றிச் செல்லும் ........,
இதுவும் ஒரு வகை
ஊடல் கலந்த காமம் தானே ....!
காதலித்துப்பார் புரியும் ......!