அண்ணனுக்கு ஒரு திருமண வாழ்த்து...
![](https://eluthu.com/images/loading.gif)
*************************************************************
/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/
*************************************************************
மணமகன்: வீரராகவன் என்ற பிரபு
மணமகள்: பிரியா
நாள்:15/03/2013
************************************************************
/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/
*************************************************************
ஞாயிறு மனம் கொண்ட பிரபுவும்
திங்கள் முகம் கொண்ட பிரியாவும்
செவ் வாய் கொண்டே சிரித்திட
புதன் அதனை கண்டு ரசித்திட
வியாழன் தனது வருகையைபதிவு செய்திட
வெள்ளிக்கிழமையில்,
வெண் நட்சத்திர மலர்கள் தூவிட
மும்மூர்த்திகளும் அருள் வழங்கிட
நவகோள் நாயகர்கள் வாழ்த்து பாடிட
சான்றோர்களும், ஆன்றோர்களும்
சுற்றமும், நட்பும் சூழ்ந்திட மன
மகிழ்ச்சியோடு மணமாலை சூடி
மணமேடை காணும் விழா-இது
தித்திக்கும் திருமண விழா
இரு மனங்கள் இணைந்திடும்
இன்னிசை திருவிழா....
என் அண்ணனின் மணவிழா...
************************************************************************
அன்பென்றும் குறையாது
ஆயுட்காலம் முழுதும்
இல்வாழ்க்கையில் இனிமையோடு
ஈடுபாடு கொண்டு
உண்மையான புரிதலோடும்
ஊடல் சில கண்டாலும்
என்றும் விட்டு விலகாது
ஏற்றமோடும்,
ஐயம் விலக்கியும்
ஒற்றுமையும் ஒழுங்கும் ஒருசேர்ந்து
ஓர் உயிர் ஈருடலாக
ஒளவ்வியம் பகிர்ந்தென்றும்
அஃதே வாழ வாழ்த்துகிறேன்....
-PRIYA